விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி மீதான, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ல், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிந்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில், அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை. மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.இதையடுத்து, வழக்கு விசாரணையை இன்றைக்கு, ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.