பெண் அடித்துக் கொலை | செய்திகள் | Dinamalar
பெண் அடித்துக் கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
05:11

காரைக்கால் -காரைக்காலில் தனியாக வசித்த பெண்ணை, தலையில் பயங்கர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.காரைக்கால் திருப்பட்டினம் வெள்ளக்குல வீதி இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி அன்னலட்சுமி(45); கூலி வேலை செய்து வந்தார்.கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு, கணவர் பாஸ்கரன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அன்னலட்சுமி தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று காலை மர்மமான முறையில் அன்னலட்சுமி அவரது வீட்டு வாசலில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில், தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார்.எஸ்.பி., வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பயங்கர ஆயுதத்தால் தலையில் தாக்கி அன்னலட்சுமி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.முதல் கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன், நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X