புதுச்சேரி-'வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மருந்து தெளிக்க வேண்டும்' என பா.ம.க., புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில வாரமாக, கடுமையான மழை பெய்துள்ளது. இதனால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.ஆகவே, தேங்கி நிற்கும் மழைநீர் வடியவும், சுகாதார பணியாளர் மூலமாக மருந்து தெளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, புழுதி பறக்கிறது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.பள்ளம் படுகுழியாக உள்ள சாலைகளில் தற்காலிகமாக மண் கொட்டி மூடுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் அறிவித்தும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதை விரைவில் வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.