பரமக்குடி : பரமக்குடி பெருமாள் கோயில் படித்துறை வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோட்டை ஒட்டி பெருமாள் கோயில் படித்துறையில் குடிநீர் தொட்டி உள்ளது.
தொட்டிக்கு அருகில் நகராட்சி மோட்டார் அறை இருந்தது.வாறுகால் ஒட்டியிருந்த இந்த அறை இடிந்து ஆபத்தாக இருந்ததால் நகராட்சியினர் இதனை உடைத்தனர்.இடிபாடுகள் அனைத்தும் பெருமாள் கோயிலை ஒட்டிய பகு தியில் இருந்து செல்லும் வாறுகால்களில் கொட்டப்பட்டதால் தண்ணீர் தேங்கியது.அப் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் கழிவு நீருடன் கலந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் நோய்க்கு ஆளாகும் சூழல் இருக்கிறது.