விசில் அடித்தால் பறந்து வரும் வவ்வால்; சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ | செய்திகள் | Dinamalar
விசில் அடித்தால் பறந்து வரும் வவ்வால்; சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
05:17

பாகூர்-கடைக்காரரின் விசில் சத்தம் கேட்டு, தினமும் பறந்து வரும் வவ்வால் ஒன்று, அவரது கையிலிருக்கும் வாழை பழத்தை சாப்பிட்டு செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



புதுச்சேரி, பாகூர் அடுத்துள்ள கன்னியகோவில் கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை,45; சி.டி., கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டு தோட்டத்தில் உள்ள மரங்களில் காய்க்கும் பழங்களை சாப்பிட வவ்வால்கள் வந்து செல்லும்.ஒரு நாள் செந்தாமரை தன் கையில் வைத்திருந்த வாழைப்பழத்தை காண்பித்து, வவ்வால்களின் கவனத்தை ஈர்க்க விசில் அடித்தார்.நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு வவ்வால் வந்து, செந்தாமரையின் கையை பற்றிக்கொண்டு, வாழை பழத்தை சாப்பிட்டு விட்டு சென்றது. இது, தற்போது வரை தினமும் தொடர்ந்து வருகிறது.இக்காட்சியை, ஒருவர் மொபைல் போனில் படம் பிடித்து 'வாஸ்ட்ஆப்'பில் பகிர்ந்துள்ளார். இக்காட்சி தற்பாது, சமுக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X