ராமநாதபுரம் : ராமகிருஷ்ண மடம் சார்பில் நர்சிங் படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில் ஏழை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் 81 நர்சிங் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதற்கான விழா உச்சிப்புளி அருகே நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மட புதிய வளாகத்தில் நடந்தது.மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர் தலைமை வகித்து 81 செவிலியர் மாணவிகளுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவிதொகைக்கான காசோலைகளை வழங்கினார்.மண்டபம் ஊராட்சி தலைவர் ஜீவானந்தம், சென்னை தொழிலதிபர் சன்னாசி பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்கள் செல்வி, வனஜா செய்திருந்தனர்.