ரோடுகளில் மழைநீர்
ஸ்ரீவில்லிபுத்துார் படிக்காசு வைத்தான்பட்டி ராஜபாளையம் ரோட்டில் வன்னியம்பட்டி விலக்கு அருகில் ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வடிகால் அடைபட்டு ரோடுகளில் மழைநீர் தேங்குகிறது.ராஜூ, படிக்காசு வைத்தான்பட்டி.நடவடிக்கை எடுக்கப்படும்உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.சிவக்குமார், பி.டி.ஓ., ஸ்ரீவில்லிபுத்துார்
ஒன்றியம்.
செயல்படாத சுகாதார வளாகம்
காரியாபட்டி சத்திரம்புளியங்குளத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் செயல்படாமல் உள்ளது. சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.ஜெயக்குமார், சத்திரம் புளியங்குளம்.நடவடிக்கை எடுக்கப்படும்.விரைவில் சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.கவிதா ராம்பிரசாத், ஊராட்சி தலைவர், சத்திரம் புளியங்குளம்.அடிப்படை வசதி இல்லை
சாத்துார் அயன் சத்திரப்பட்டி ஆனந்தம் நகர் காலனியில் ரோடு ,சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.ஆனந்தவல்லி, சத்திரப்பட்டி.கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்ஒன்றியக்குழு தலைவர் மூலம் பி.டி.ஓ., கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.கனகராஜ், ஊராட்சி தலைவர், அயன்சத்திரப்பட்டி.செயல்படாத வணிக வளாகம்நரிக்குடி நாலுாரில் வணிக வளாகம் செயல்படாமல் உள்ளது.
செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜா, நாலுார்.விரைவில் நடவடிக்கைசெயல்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.பரமேஸ்வரி பாலமுருகன், ஊராட்சி தலைவர், நாலுார்.தேங்கும் மழைநீர்சிவகாசி ஆனையூர் அங்கன்வாடி மையம் முன் மழைநீர் தேங்கி உள்ளது. அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, ஆனையூர்.வெளியேற்ற நடவடிக்கைமழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.லட்சுமி நாராயணன், ஊராட்சி தலைவர்.பூட்டியே கிடக்கும் வளாகம்ஸ்ரீவில்லிபுத்துார் லட்சுமியாபுரம் புதுாரில் பெண்கள் சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குமரேசன், ஸ்ரீவில்லிபுத்துார்.நடவடிக்கை எடுக்கப்படும்
பெண்கள் வளாகத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.சிவக்குமார், பி.டி.ஓ., ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியம்.விபத்து அபாயம்சிவகாசி மாநகராட்சி அலுவலகம் நுழைவு வாயில் பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.நிரோஸ், சிவகாசி.அமைக்கப்படும்.
தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர், சிவகாசி.சாக்கடை வசதி வேண்டும்விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர்.,காலனி பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கணேஷ், விருதுநகர்.நடவடிக்கை எடுக்கப்படும்சாக்கடை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.செல்வி, ஊராட்சி தலைவர், கூரைக்குண்டு.