சேறும் சகதியுமான சாலைபெரிய காலாப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் எதிரே இ.சி.ஆர்., சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.புவனேஸ்வரி, பெரிய காலாப்பட்டு.சுடுகாடு பாதை ஆக்கிரமிப்புகோர்க்காடு சுடுகாட்டு பாதையில் இருபுறமும் குப்பைகளை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சவ ஊர்வலம் கொண்டு செல்ல இடையூறாக உள்ளது. ரகு, கோர்க்காடு.சேதமான சாலையால் அவதி பாகூர் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமான தார் சாலைகள் சீர் அமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மூர்த்தி, இருளஞ்சந்தை.புதுச்சேரி - கடலூர் சாலையில் ஜல்லிகள் சிதறி கிடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றது.கண்ணன், கிருமாம்பாக்கம். செட்டிப்பட்டு புது நகர் பிள்ளையார் கோவில் தெரு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சேகர், செட்டிப்பட்டு.சாலையில் தேங்கிநிற்கும் மழைநீர் கூனிச்சம்பட்டு மணக்குள விநாயகர் நகரில் சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.குமார், கூனிச்சம்பட்டு.இறைச்சிக்கழிவுகளால் சுகாதார சீர்கேடுதிருக்கனுார் புறவழி சாலையில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சங்கர், திருக்கனுார் .ஆக்கிரமிப்பால் மழைநீர் வடிவதில் சிக்கல்புதுச்சேரி - கடலூர் சாலை பிள்ளையார்குப்பம் சந்திப்பில் வடிகால் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோபால், காட்டுக்குப்பம்.