அரியாங்குப்பம்-முதலியார்பேட்டையில் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் கண்காணித்தனர். ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாணரப் பேட்டையை சேர்ந்த அர்ஜூன், 43; என்பவரை கைது செய்தனர். லாஸ்பேட்டைபாக்கமுடையான்பட்டு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த, வெண்ணிலா நகர், பஜனை மடத்து வீதியைச் சேர்ந்த சூசைராஜ், 44; மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் (எ) சீனிவாசன், 34; ஆகிய இருவரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து ரூ. 10 ஆயிரம் பணம், 2 மொபைல் போன், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.