புதுச்சேரி-கொரோனா தொற்றினால் மாகியில் மூதாட்டி உயிரிழந்தார்.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,354 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.நேற்று முன்தினம் கொரோனாவால் மாகி பிராந்தியத்தில் 86 வயது மூதாட்டி உயிரிழந்தார். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,873 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,28,965 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 60 பேர், வீடுகளில் 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் 35 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,803 ஆக உயர்ந்துள்ளது.