'பா.ஜ., மீது பழி சுமத்துவது நாராயணசாமியின் வாடிக்கை' | செய்திகள் | Dinamalar
'பா.ஜ., மீது பழி சுமத்துவது நாராயணசாமியின் வாடிக்கை'
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
05:23

காரைக்கால்-காரைக்கால் மாவட்ட பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டம் பாரதியார் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி வரவேற்றார்.கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:அரசை முன்னாள் முதல்வர் குறை கூறுவது அவரது வழக்கம். மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்கும் நிதியை நிறுத்துகிறது என கூறுவது தவறு. ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் உட்பட அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பா.ஜ., மீது பழிசுமத்துவதில் வாடிக்கையாக உள்ளார். மத்திய, மாநில அரசுகள் ஒற்றுமையாக மக்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றன.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X