மழையால் பாதித்த மக்களுக்கு பா.ஜ., நிவாரண உதவி வழங்கல் | செய்திகள் | Dinamalar
மழையால் பாதித்த மக்களுக்கு பா.ஜ., நிவாரண உதவி வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
05:23

புதுச்சேரி-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.,சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.முதலியார்பேட்டை பாரதிதாசன் நகர் வார்டு, தியாகு முதலியார் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பா.ஜ., கூட்டுறவு பிரிவு சார்பில் நிவாரண உதவி நேற்று வழங்கப்பட்டது. கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் தலைமை தாங்கினார். தொகுதித் தலைவர் இன்பசேகர், செல்வகணபதி முன்னிலை வகித்தனர்.அமைச்சர் நமச்சிவாயம்,மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றி நிவாரண உதவிகளை வழங்கினர்.அசோக் பாபு எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார், துணைத் தலைவர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மாநில கூட்டுறவு பிரிவு செயற்குழு உறுப்பினர் திரிச்சந்திரன் செய்தார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X