அங்கன்வாடியில் போட்டோ திருட்டு | செய்திகள் | Dinamalar
அங்கன்வாடியில் போட்டோ திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
05:26

புதுச்சேரி-மூலகுளம் ஜெ.ஜெ. நகர் அங்கன்வாடி மையத்தில் கடந்த ஒரு மாதமாக புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம் நடந்தது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு அங்கன்வாடியில் வைத்திருந்தனர்.நேற்று மதியம் பூட்டப்பட்டு இருந்த அங்கன்வாடியின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கன்வாடி முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பத்தில் இருந்த 8 பெண்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. அங்கன்வாடி அருகே மூட்டையில் வைக்கப்பட்டு இருந்த பிரஷர் குக்கர் உள்ளிட்ட பாத்திரங்கள் மீட்கப்பட்டது.போட்டோக்களை எதற்காக திருடிச் சென்றனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X