சங்கராபுரம்-தேசிய நுலக வார விழா, உறுப்பினர் சேர்க்கை விழா, பட்டயம் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா தேவபாண்டலத்தில் நடந்தது.தேவபாண்டலம் கிளை நுாலகத்தில் நடந்த விழாவிற்கு, வாசகர் வட்ட தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்கத் தலைவர் பாலசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா, ஊராட்சித் தலைவர் பாப்பாத்தி நடராஜன் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் இனாயதுல்லா வரவேற்றார்.மாவட்ட நுாலக அலுவலர் சுப்ரமணியன் புரவலர் பட்டயம் வழங்கி பேசினார். உறுப்பினர் சேர்க்கையை ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரிமா மாவட்ட தலைவர் வேலு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் 13 பேர் புரவலர்களாகவும், தேவபாண்டலம் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் 200 மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.