திண்டிவனம்-திண்டிவனம் அருகே ஆத்துார், கோவடி பகுதிகளில் மழை பாதிப்பு பகுதிகளை அர்ஜூனன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.அப்போது, கோவடியில் உள்ள அரசு பள்ளியில் தொடர் மழையால், வகுப்பறை ஒழுகுவதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, பொது மக்கள் நுாறு நாள் வேலை திட்டத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாக, புகார் தெரிவித்தனர்.மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.