அவலுார்பேட்டை-மேல்மலையனுாரில் கோமாரி நோய் தாக்கியதில் 5 கால் நடைகள் இறந்தன.மேல்மலையனுாரைச் சேர்ந்தவர் நடராஜ். இவர், கால் நடைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு கறவை மாடு, தலா இரண்டு கன்றுகள், 2 ஆடுகள் கோமாரி நோய் தாக்கி நேற்று முன்தினம் இறந்தன.கால் நடை துறை மருத்துவ அதிகாரிகள் இப்பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்திட நடவடிக்கை வேண்டும்.