செஞ்சி-செஞ்சியில் இருந்து சென்னைக்கு நேரடி பஸ்கள் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி வழியாக பழவலம், எதப்பட்டு, அணிலாடி ஆகிய கிராமங்களில் இருந்து சென்னைக்கு நேரடி பஸ் வசதி செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று துவக்கியது. அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல மேலாளர் செல்வன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் சுரேஷ் வரவேற்றார்.துணை மேலாளர் (இயக்குதல்) மணி, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.திண்டிவனம்திண்டிவனத்திலிருந்து ஆலப்பாக்கம் வழியாக மாரியமங்கலம், கர்ணாவூர் வழியாக மூர்த்திபேட்டை, கூட்டேரிப்பட்டிலிருந்து தீவனுார் வழியாக வெள்ளிமேடுப்பேட்டை செல்லும் டவுன் பஸ் மற்றும் திண்டிவனத்திலிருந்து நடுக்குப்பம் வழியாக மரக்காணம் செல்லும் புதிய வழிதட பஸ்களை அமைச்சர் மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,சேதுநாதன், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தயாளன், பழனி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், போக்குவரத்து கழக பொது மேலாளர் செல்வம், துணை மேலாளர்கள் மாணிக்கம், மணிகண்டன், திண்டிவனம் கிளை மேலாளர் நாராயணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.