விருதுநகர் : விருதுநகரில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு மூலம் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
எஸ்.பி., மனோகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்து பேசினார்.விழிப்புணர்வு கையேடு நிலையத்தை துவக்கி வைத்தும், கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, மனித சங்கிலி போன்ற நிகழ்ச்சி நடந்தது.டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் கலுசிவலிங்கம், எய்ட்ஸ் கட்டுப்பாடு மாவட்ட திட்ட மேலாளர் வேலய்யா பங்கேற்றனர்.