சாத்துார் : தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லுாரி, பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
ஒன்றிய குழு தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், கடற்கரைராஜ் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை நகராட்சி பிட்டர் சண்முகையா பாண்டியன் செய்திருந்தார்.