திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் ஊராட்சி முதல் கூட்டம் நடந்தது.ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தலைவர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகுணா வரவேற்றார்.ஊராட்சி உறுப்பினர்கள் சிவசங்கரி, கார்த்திகேயன், விசாலாட்சி, சீனுவாசன், சக்திவேல், காமாட்சி, ஆறுமுகம், அஞ்சலை உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், பையூர் மற்றும் சேத்துார் கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்டுவது. சமுதாய கூடம் மற்றும் அங்கன்வாடி கட்டடம் கட்டுவது, ஞானகுரு தட்சணாமூர்த்தி கோவிலுக்கு பொது கழிவறை கட்டுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலாளர் கவிச்செல்வன் நன்றி கூறினார்.