விழுப்புரம்-'சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என டி.எஸ்.பி., பார்த்திபன் கூறினார்.விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., பழனிசாமி, நாமக்கல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, விழுப்புரம் டி.எஸ்.பி.,யாக பார்த்திபன் நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.அப்போது, அவர் கூறுகையில், 'விழுப்புரம் நகரில் கஞ்சா, லாட்டரி, மணல் கடத்தல், சாராய விற்பனை என எந்த புகாராக இருந்தாலும் 96261 21985 என்ற மொபைல் எண்ணிலோ அல்லது நேரிலோ தகவல் தெரிவிக்கலாம்.சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும் அதுபோன்ற செயல்களுக்கு துணைபோகும் போலீசார் குறித்தும் விசாரித்து துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.விக்கிரவாண்டிடி.எஸ்.பி., பொறுப்பேற்றதையடுத்து, நேற்று விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகள், நாட்குறிப்பு, ஆயுத கிடங்கு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்சின்னப்பன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.