அருப்புக்கோட்டை : ''அருப்புக்கோட்டைக்கு புதிய குடிநீர் திட்டம் மூலம் தினசரி குடிநீர் வழங்கப்படவுள்ளதாக,'' என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
அருப்புக்கோட்டையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது: அருப்புக்கோட்டைக்கு புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவாக நடக்கிறது. இன்னும் சில மாதங்களில் நகருக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும். பாதாள சாக்கடை பணிகள் செய்யப்பட உள்ளது. சுகாதாரமான நகராக அருப்புக்கோட்டை மாறி விடும், என்றார். முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேஷ், இளைஞரணி பாபு, ராஜசேகர் பங்கேற்றனர்.