விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லேக் அதாலத்) வரும் 11ம் நடைபெற உள்ளது.விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் அந்தந்த தாலுகாக்களில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழு, கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், வானுார், சங்கராபுரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் 11ம் தேதி நடக்கிறது.நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து, சிவில், குடும்ப நலம், குற்றவியல், காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகள் சுமூக முறையில் விசாரித்து தீர்வு காணப்படும்.வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காளிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு கண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.