விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அடுத்த எசாலம் அன்னை திரிபுர சுந்தரி சமேத ராமநாதேஸ்வரர் கோவிலில் மழை நீர் வடியாததால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.விக்கிரவாண்டி பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக எசாலம் திரிபுர சுந்தரி சமேத ராமநாதேஸ்வரர் கோவில், வளாகத்தினுள் கருவறை வரை மழைநீர் சூழ்ந்துள்ளது. இன்னும் வடியாத நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.அறநிலையத் துறை அதிகாரிகள் கோவிலை பார்வையிட்டு, வளாகத்தினுள் சூழ்ந்துள்ள நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.