சின்னசேலம்-சின்னசேலம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன், மழைநீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சின்னசேலம் அடுத்த பெத்தானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றியுள்ள ராயர்பாளையம், ஈசாந்தை, பெரியசிறுவத்துார், நாட்டார்மங்கலம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், ஆரம்ப சுகாதார நிலையம் முன் வடிகால் வசதியின்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, சுகாதார நிலையம் முன் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவும், தண்ணீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.