உரம் தட்டுப்பாட்டால் டெல்டா விவசாயிகள்.. கவலை: கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

02 டிச
2021
07:34
பதிவு செய்த நாள்
டிச 02,2021 05:53

காட்டுமன்னார்கோவில்-காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதிகளில் யூரியா, பொட்டாஷ் உரம் கடும் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



கடலுார் மாவட்ட டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், புவனகிரி மற்றும் பரங்கிப் பேட்டை வட்டாரத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, நெற்பயிர்கள் 70 முதல் 80 நாட்கள் கொண்டதாக உள்ளன. விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு அடி உரமாக டி.ஏ.பி, காம்ப்ளக்ஸ் பயன்படுத்துகின்றனர். தற்போது மேல் உரமாக யூரியா மற்றும் பொட்டாஷ் இட வேண்டிய காலம். ஆனால் யூரியா, பொட்டாஷ் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.



இதனால், மாவட்டம் கடந்து சென்று கூடுதல் விலை கொடுத்து உரம் வாங்க வேண்டிய அவல நிலைக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மாவட்ட தரக்கட்டுப்பாடு துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை, உர நிறுவனங்களில் இருந்து வாங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், விற்பனை அங்கீகாரம் பெற்ற உரக்கடைகளுக்கு வழங்குகிறது. யூரியா ரூ, 270, பொட்டாஷ் ரூ. 1000 என, அரசு நிர்ணயித்த விலையில் விற்க வேண்டும். ஆனால், உரக்கடை கள்ள மார்க்கெட்டில் யூரியா ரூ. 300 முதல் ரூ. 400 வரையிலும், பொட்டாஷ் ரூ. 1,100 முதல் ரூ. 1,200 அளவில் விற்கப்படுகிறது.காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி டெல்டா பகுதிக்கு காரீப் பருவம் குறுவை சாகுபடிக்கு யூரியா 9,180 டன், டி.ஏ.பி 1,036 டன், காம்ப்ளக்ஸ் 5,581 டன், பொட்டாஷ் 346 டன். ராபீ பருவம் எனப்படும் சம்பா சாகுபடிக்கு யூரியா 10,899 டன், டி.ஏ.பி 1,561 டன், காம்ப்ளக்ஸ் உரம் 11,776 டன், பொட்டாஷ் 1,759 டன் ஒதுக்கீடு செய்து வழங்கப்படுகிறது.இதில் நவம்பர் வரை யூரியா 6,200 டன்னும், பொட்டாஷ் 1,200 டன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இரு உரங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்காமல் விவசாயிகள் வயல்களுக்கு உரம் போடாமல் இருப்பதால் மகசூல் குறையுமோ என கவலையடைந்துள்ளனர்.



மேலும், சிலர் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று, கூடுதல் விலை கொடுத்து உரம் வாங்கி வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உரத்தட்டுப்பாடு குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'வேளாண் துறை சாகுபடி பரப்பு, பயிர்களுக்கு இட வேண்டிய உரம் அளவுகளை கணக்கிட்டு, அதனை அரசுக்கு பரிந்துரை செய்து, உர நிறுவனங்களில் இருந்து வாங்கி கொடுக்கிறோம். உர நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் உரத்தின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை.



ஆனால் விவசாயிகள் சாகுபடி பயிர்களுக்கு தேவைக்கு அதிக உரங்களை பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது' என்றனர்.விவசாயிகளுக்கு தேவையான அளவு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X