ஆன்மிகம் பகவத் கீதை மகோற்சவம்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹிந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் பாராயணம், உபன்யாசம்: ஆர்.கிருஷ்ண கிருபா. நேரம்: மாலை 6:00 முதல் 7:30 மணிவரை. இடம்: ருக்மணி சமேத பாண்டுரங்க சுவாமி கோவில், வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை -5. பொது ஓவிய கண்காட்சி: 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் ‛தினமலர்' நாளிதழ் இணைந்து நடத்தும் ஓவியர் மணிவேலுவின் 'இறை இடம் இவர்' ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை. முற்பகல் 11:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: டாட் ஸ்கூல் ஆப் டிசைன் தொழில்நுட்ப கல்வி மையம், புறவழிச் சாலை, தொழிற்பேட்டை, அம்பத்துார், சென்னை---- - 58. தொடர்புக்கு: 95000 12166. நாட்டிய நாடக விழா: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கிருஷ்ண கான சபா இணைந்து நடத்தும் துவக்க விழா. ‛ப்ரக்ருதி தாண்டவம்' நாட்டிய நாடகம். பங்கேற்பு: பா.மதுசூதனின் ஆத்மா நடன கலைக்கூடத்தினர். நேரம்: மாலை 6:00 மணி. இடம்: கிருஷ்ண கான சபா, எண்: 20, மகராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர், சென்னை -- 17. தொடர்புக்கு: 044- 2493 7471. மாதாந்திர கூட்டம்: டாக்டர் அம்பேத்கர் அகாடமி கூட்டம். சிறப்புரை: பேரா., எஸ்.தேவதாஸ், ஏ.பத்மநாபன் ஐ.ஏ.எஸ்., நேரம்: மாலை 6:30 மணி. இடம்: பத்மநாபன் மேன்ஷன், எல் -73, காவேரி காலனி, 24வது தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை -- 102.