ஆக்கிரமிப்பால் கன மழையிலும் நிரம்பாத இடையன்குளம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
06:29


கம்பம் : ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள கம்பம் புதுப்பட்டி இடையன்குளம் கண்மாய் கனமழையின் போதும் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



.கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி மேற்கு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது இடையன்குளம் கண்மாய். 36 ஏக்கரிலான இக் கண்மாய் நூற்றுக்கணக்கான தோட்ட கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், அருகில் உள்ள கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரவும் பயன்படுகிறது.



மழை காலங்களில் வரும் காட்டாற்று வெள்ளநீர் கண்மாய்க்கு கிடைக்கும். சில ஆண்டுகளாக 18 ம் கால்வாயில் நீர் கண்மாய்க்கு கிடைக்கும். புதுப்பட்டி மட்டுமின்றி ஊத்துக்காடு, காக்கில் சிக்கையன்பட்டி, கோவிந்தன்பட்டி கிராமங்களும் பயன்படும்.நிரம்பவில்லை:இவ்வளவு பயன்பாடுள்ள இக் கண்மாய் தற்போது பெய்து வரும் கனமழையில் கூட நிரம்பவில்லை. 50 சதவீத பகுதிகள் கட்டாந்தரையாக உள்ளது. இதற்கு காரணம் கண்மாயில் 30 ஏக்கர் ஆக்கிரமித்து புளியமரங்கள் வளர்க்கின்றனர். ஆக்திரமிக்காத சிறிய பகுதி பள்ளமாக உள்ளதால் தண்ணீர் இதில் தேங்கி நிற்கிறது. பள்ளம் நிரம்பியவுடன் ஒடை வழியே வெளியே நீர் வெளியேறிவிடுகிறது.இதனால் கண்மாயின் பெரும்பகுதி தண்ணீர் நிரம்பாமல் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.



ஆக்கிரமிப்புக்களை அகற்ற விவசாயிகள் சங்கம் பலமுறை முயற்சி செய்தும் இதுவரை பலனில்லை. பொதுப்பணித் துறையினரும் ஆக்கிரமிப்பு பற்றி கவலைப்படுவதில்லை.இறவை பாசனத்திற்கு சிக்கல்சிவாஜி மோகன், தலைவர், விவசாயிகள் சங்கம்,புதுப்பட்டி.இடையன்குளம் கண்மாய் நிரம்பினால் இப்பகுதி தோட்டங்களில் இறவை பாசனத்திற்கு மறைமுகமாக பயன்படுகிறது. கண்மாயில் தண்ணீர் இருந்தால் கிணறுகளில் நீர் வற்றாமல் இருக்கும். கண்மாய் பெரும்பகுதி ஆக்கிரமிப்பால் இறவை பாசனத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றி முழு கொள்ளளவு நீர் தேக்க வேண்டும்.



மலையடிவாரங்களில். மஞ்சனூத்து, தளிக்காடு உள்ளிட்ட பல இடங்களில் விவசாயிகள் சொந்தமாக தடுப்பணை கட்டியுள்ளனர். இதனால் கால்நடைகளின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.சிலரின் சுயநலத்தால் பாதிப்பு:கண்ணன், விவசாயி புதுப்பட்டி : வடகிழக்கு பருவமழை இவ்வளவு பெய்தும் கண்மாய் நிரம்ப வில்லை. கோடைகாலத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் குடிக்க தண்ணீரின்றி சிரமப்பட வேண்டியுள்ளது. ஒரு சிலரின் சுயலாபத்திற்காக ஒட்டுமொத்த கிராமம் பாதிக்கப்படுகிறது. கலெக்டரிடம் மனு கொடுத்தும பலனில்லை. பொதுப்பணித்துறையினரும் அலட்சியமாக உள்ளனர். ஆக்கிரமிப்பகளை அகற்றி புதுப்பட்டி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும்

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X