ஆவடி--ஆவடியில் முறைகேடு புகாரில் சிக்கிய மாநகராட்சி அதிகாரியை, நகராட்சி நிர்வாக இயக்குனர் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.ஆவடி மாநகராட்சியில், நகரமைப்பு ஆய்வாளராக பணி புரிந்தவர் தினகர். இவர் பணியில் இருந்த காலகட்டத்தில் பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில், ஏரி நிலங்க ளில் கட்டடங்கள் கட்ட ஏராளமான அனுமதிகள் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இவர் கட்டட அனுமதி அளித்த பல இடங்களில், கன மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இவர் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, ஆவடி மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளராக பணி புரிந்த தினகரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.