சென்னை-கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின், சென்னை மெட்ரோ ரயிலில், 1.30 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு தளர்வுக்குபின், கடந்த ஜூன் 21ம் தேதியில் இருந்து, மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியோர் எண்ணிக்கை, ஜூன் 21 முதல் நவ., 30ம் தேதி வரை, 1 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 833.அதிகபட்சமாக நவ., 25ம் தேதி, 1.31 லட்சம் பேர் பயணம் செய்து உள்ளனர்.மெட்ரோவில், நவம்பர் மாதம் மொபைல் போனில், 'க்யூ ஆர்' குறியீடு பயன்படுத்தி, 45 ஆயிரத்து 609 பேரும், 'டிராவல் கார்டு' வசதியில், 16 லட்சத்து 16 ஆயிரத்து 958 பேரும் பயணம் செய்துள்ளனர்.'டிராவல் கார்டு, கியூ ஆர்' குறியீடு பயன்படுத்தி பயணிப்போருக்கு, 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.