சில வரி செய்திகள் | சென்னை செய்திகள் | Dinamalar
சில வரி செய்திகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
06:43

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் மறுப்புசென்னை: மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், பள்ளியின் தாளாளரான சிவசங்கர் பாபா, 2021 ஜூன் 16ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமின் கோரிய இவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இரண்டாவது முறையாக ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு, நீதிபதி தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து விட்டதாகவும், ஐந்து மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதாகவும், சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இதையடுத்து, சந்தர்ப்ப சூழலில் எந்த மாற்றமும் இல்லாததால், ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.ரூ.3 கோடி அபகரித்தோருக்கு 'காப்பு'சென்னை: சென்னை பனையூரைச் சேர்ந்தவர் சப்தசாயி, 65. இதே பகுதியிலுள்ள இவருக்குச் சொந்தமான, 4,800 சதுர அடி மனையை, அவரது பெயரிலேயே ஆள்மாறாட்டம் செய்து, சிலர் அபகரித்தனர். இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில், சப்தசாயி புகார் அளித்தார்.விசாரணையில், சப்தசாயி பெயரில் ஆள்மாறாட்டம் செய்தது ஜான் ஜேக்கப் என்பதும், அந்த இடத்தை அவருக்கு பொது அதிகார பத்திரம் பதிவு செய்ததும் தெரிந்தது. இவர்களுக்கு ராஜ்குமார் மற்றும் சிலர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து, ஜான் ஜேக்கப், 45, ராஜ்குமார், 52, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கல்லுாரி மாணவி தற்கொலைடி.பி.சத்திரம்: அண்ணா நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர், 17 வயது கல்லுாரி மாணவி. நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள தன் தாத்தா வீட்டில், மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த டி.பி., சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியில் உள்ள, பள்ளி அரசன் தெருவைச் சேர்ந்த ஸ்ரீராம், 19, என்பவரை மாணவி காதலித்தது தெரிய வந்தது. மற்றொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்ரீராம் அனுப்பியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீஸ் வாகனத்தை தாக்கியவர் கைதுமாதவரம்: சென்னை மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கம், காமராஜர் சாலையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 36, ஆட்டோ ஓட்டுனர். அவர், நேற்று முன் தினம் நள்ளிரவு, குடிபோதையில் வீட்டிற்கு சென்றார். கண்டித்த மனைவியுடன் தகராறு செய்து தாக்கினார். அதைக்கண்ட வீட்டின் உரிமையாளர் சந்தோஷ்குமார், காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார். மாதவரம் பால்பண்ணை போலீசார், ரோந்து வாகனத்தில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது, ரஞ்சித்குமார், கல் வீசி, போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார். அவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமி தற்கொலை முயற்சிமயிலாப்பூர்: மயிலாப்பூர், ரூதர்புரத்தைச் சேர்ந்தவர் கீதா, 42. இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம், 5,000 ரூபாய் கடன் வாங்கி திருப்பி கொடுக்கவில்லை. ஆத்திரமடைந்த அப்பெண், நேற்று முன்தினம் இரவு பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த கீதாவின் 16 வயது மகள், கழிப்பறையை சுத்தம் செய்யும் ரசாயனத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே சிறுமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.தந்தையை தாக்கிய மகனுக்கு 'கம்பி'அண்ணா நகர்: அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜு, 65. வழக்கறிஞர். இவருக்கு ராகுல், 36 மற்றும் வெங்கடேஷ், 33 என, இருமகன்கள் உள்ளனர். சொத்து பிரச்னை காரணமாக, குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தந்தைய இரு மகன்களும் தாக்கியுள்ளனர். இதில், ராஜு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக, அண்ணா நகர் காவல் நிலையத்தில் ராஜு புகார் அளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்த போலீசார், ராகுலை தேடி வருகின்றனர்.டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் திருட்டுமயிலாப்பூர்: மயிலாப்பூர், பி.எஸ்., சிவசாமி சாலையில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருபவர் பாஸ்கர், 52. கடந்த மாதம் 23ம் தேதி, இந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்து, 2.15 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக, சாஸ்திரி நகரைச் சேர்ந்த ராமு, 21, என்பவரிடம் மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா வழக்கில் இருவர் சிக்கினர்வில்லிவாக்கம்: பாடி மேம்பாலம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரை, வில்லிவாக்கம் போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திவாகர், 22, சதீஸ்குமார், 19, என்பதும், இவர்கள் கடந்தாண்டு, ஐ.சி.எப்.,பைச் சேர்ந்த ஷாஜகான் என்பவரை கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து, கத்தி, 1.5 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணைக்கு பின், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.ஓட்டுனர் மண்டை உடைப்புமதுரவாயல்:- மதுரவாயல், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு, 34; வாகன ஓட்டுனர். இவரது வீட்டின் எதிரே, ஒரு வாரமாக வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வேனை, நேற்று முன்தினம் இரவு ஒருவர் எடுக்க வந்த போது, அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபர், சிலரை அழைத்து வந்து பாபுவை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். தலையில் காயமடைந்த பாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X