விளம்பர பலகைகளை அகற்றியும் இரும்புச் சாரங்கள் அகற்றம் இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
06:45

குரோம்பேட்டை-சென்னை புறநகர் பகுதியில் ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறத்திலும், ஆபத்தான வகையில் வைக்கப்பட்டிருந்த ராட்சத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டாலும், அவை வைக்க பயன்படும் இரும்பு சாரங்கள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளதால், எந்நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.



தமிழகம் முழுதும், பொது மற்றும் தனியார் இடங்கள், சாலை ஓரங்களில், ஆபத்தான வகையில் வைக்கப்பட்டுள்ள, ராட்சத விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு இடங்களிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையோரத்தில், தனியார் கட்டடங்களின் மேல், ஏகப்பட்ட ராட்சத விளம்பர பலகைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சில இடங்களில் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டாலும், அவை வைக்க பயன்படுத்தப்படும் ராட்சத இரும்பு கம்பிகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. இதனால், சில தினங்களில் அதே இடத்தில் மீண்டும் புதிய விளம்பர பலகைகள் வைக்க வாய்ப்புள்ளது. அதே போல், பலத்த காற்றடித்தாலோ, மழையால் துருப்பிடித்து இரும்பு கம்பி சரிந்து விழுந்தாலோ, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிர் பலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக போக்குவரத்து கொண்ட ஜி.எஸ்.டி., சாலையின் ஓரத்தில், தொடர்ச்சியாக காணப்படும் ராட்சத இரும்பு சாரங்கள் மற்றும் பேனர்களால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் நிலவுகிறது. விபத்து ஏற்படும் முன், அதிகாரிகள் விழித்துக்கொண்டு, ஆபத்தான நிலையில் காணப்படும் விளம்பர கம்பிகளை அகற்ற வேண்டும்.தாம்பரம் மாநகராட்சி-, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்-, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை இணைந்து, இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X