சென்னை-திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் கல்பனா, 45; ஐஸ்கிரீம் கடை வைத்துள்ளார். அம்பத்துாரில் தமிழ்நாடு பால் உணவுகள் விற்பனை மையத்தால் இயக்கப்படும், திருச்சி மாவட்டம், சமயபுரம் கிளையில், 2013ல் 30 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி, பால் உணவுகள் விற்பனை முகவரானார்.அப்போது, 500 லிட்டர் கொள்ளளவு உள்ள 'ப்ரீசர்' வழங்கப்பட்டது. இந்நிலையில் ப்ரீசர் கோளாறால் அதில் இருந்த அனைத்து பொருட்களும் கெட்டு போனது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கில், முகவருக்கு, முன்பணம், 30 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 5,000 ரூபாய் வழக்கு செலவும், நிறுவனங்கள் வழங்க வேண்டும் என, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, நிறுவனங்களால், சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாநில நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகிய மூவரும், முகவருக்கு முன்பணம், 30 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் உத்தரவிடப்பட்டது.