கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் வாகன பார்க்கிங் வளாகங்கள் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2021
06:52

கும்மிடிப்பூண்டி--கும்மிடிப்பூண்டி 'சிப்காட்' வளாகத்தில், 8 கோடி ரூபாய் மதிப்பில், 300 கனரக வாகனங்கள் நிறுத்தக்கூடிய மூன்று பார்க்கிங் வளாகங்கள் திறக்கப்பட உள்ளன.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்திற்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.நிர்வாக சிக்கல் காரணமாக, ஒவ்வொரு வாகனங்களாக தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படுவதால், எஞ்சிய வாகனங்கள் அந்தந்த தொழிற்சாலை முகப்பில் உள்ள சிப்காட் சாலைகளில் நிறுத்தப்படுகின்றன. இதனால், பிற வாகனங்கள் கடக்க முடியாதபடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.இரவு நேரங்களில், இதுபோன்று சாலையோரம் வாகனங்களை நிறுத்தி காத்திருக்கும் டிரைவர், கிளினர்களிடம், சிலர் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் நடக்கின்றன.இதற்கு தீர்வு காணும் விதமாக, சிப்காட் வளாகத்திற்கு உட்பட்ட மூன்று இடங்களில், 8 கோடி ரூபாய் செலவில், வாகன பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பாரத் பெட்ரோலியம் எரிவாயு நிரப்பும் நிலையம், ஆதித்யா பிர்லா கார்பன், ஏ.ஆர்.எஸ்., ஸ்டீல் ஆகிய மூன்று தொழிற்சாலைகளுக்கு எதிரே, தலா, இரண்டு ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது.ஒவ்வொரு இடத்திலும், 100 கனரக வாகனங்கள் என, மூன்று இடங்களிலும், மொத்தம், 300 வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.உயர்கோபுர மின் விளக்கு, கழிப்பறை, காவலர்கள் உள்ளிட்ட வசதிகள் வர இருக்கின்றன.இந்த பார்க்கிங் வசதி வாயிலாக சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வழிப்பறி சம்பவங்களுக்கு தீர்வு எற்படும். விரைவில், அந்த பார்க்கிங் வளாகங்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X