திருப்போரூர்-வடகிழக்கு பருவ மழையால், திருப்போரூர் வட்டார வயல்களில் தண்ணீர் சூழ்ந்து, நெற்பயிர் வீணாகி வருகிறது.இதன் பாதிப்பை தவிர்க்க, திருப்போரூர்வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் ஆலோசனை வழங்கியுள்ளது.அதன் விபரம்:l மழை நீர் சூழ்ந்த வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து, வேர் பகுதிக்கு காற்றோட்டம்கிடைக்க செய்ய வேண்டும்l நடவு செய்யப்பட்டு சில நாட்களான பயிர்கள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டு, இடம் காலியாக இருக்கும். அந்த இடத்தில் அதே ரகத்தை வைத்து அல்லது நடவுசெய்த குத்துகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாற்றுகள் இருப்பின் அதை பிடுங்கி, நடவு செய்ய வேண்டும்l நீரில் மூழ்கிய பயிர்கள் மஞ்சள், பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது. துத்தநாகம், தழைச்சத்து பற்றாக்குறையால் இந்நிலை ஏற்படும். இதை சரிசெய்ய ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 1 கிலோ ஜிங்க் சல்பேட், 200 லிட்டர் நீரில் கலந்து கைத் தெளிப்பான் கருவியால், பயிரின் மேல் உடனடியாக தெளிக்க வேண்டும்l மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஓரிரவு முழுதும் வைத்து, வயலில் தண்ணீர் வடிந்தவுடன் இட வேண்டும்l பூச்சி தாக்குதல் அதிகமானால், வேம்பு சார்ந்த மருந்துகளை, வேளாண் துறையின் பரிந்துரையின்படி உபயோகிக்க வேண்டும்l பயிரின் இலைகள் சேதம், தண்ணீர் அதிகமாய் தேங்கி பயிர் வலுவிழப்பு, இரவு வெப்பநிலை குறைவால், நோய்களின் தீவிரம் அதிகரிக்கக்கூடும். 30 - -40 நாட்கள் வயதுடைய பயிர்களுக்கு தண்ணீர் வடித்து, சூடோமோனாஸ்.ப்ளூரோசன்ஸ் ஏக்கருக்கு 1 கிலோ வீதம், 20 கிலோ மக்கிய தொழு எரு அல்லது மணல் கலந்து சீராக துாவினால் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபரங்களுக்கு திருப்போரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்கனர் அல்லது வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.