செங்கல்பட்டு--செங்கல்பட்டு அடுத்த, சாஸ்திரம்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகள் யுத்திகா, 13. தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம், தென்னேரி உபரி நீர் செல்லும் அதே பகுதி கால்வாயில், தோழியருடன் குளித்தார். அப்போது யுத்திகா, தண்ணீரில் அடித்துச்செல்லப்படார்.தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி பார்த்தபோது, கிடைக்கவில்லை.நேற்று, கால்வாயில் இருந்து சிறுமின் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.