காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் பாலாற்றில், கருவேலம் மரங்கள் ஏராளமாக இருந்தன. நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் இம்மரங்களை அகற்ற, விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேலாக பாலாற்றில் வெள்ளம் தொடர்ந்து செல்வதால், பெரும்பாலன முள் மரங்கள், வேரோடு அடித்து செல்லப்பட்டன. மேடான சில இடங்களில் மட்டுமே, மரங்கள் காணப்படுகின்றன.மேடு பள்ளங்களாக காணப்பட்ட ஆற்று படுகையில் மணல் நிறைந்து, சமன்படுத்தியதுபோல் உள்ளது. பாலாறு, செய்யாறு குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலங்கள், வெள்ளத்தால் உடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலும், ஆற்றில் இருந்த முள் செடிகள், ஆற்று பள்ளத்தில் மணல் பரப்பியது, விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.