மூன்று தெருக்களில் பள்ளி கட்டடம் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
மூன்று தெருக்களில் பள்ளி கட்டடம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
07:05

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, சின்னவேப்பங்குளக்கரையில், மூன்று தெருக்களில் தனித்தனி கட்டடங்களில் இயங்கி வருகிறது.ஒரு வகுப்பறையில் இருந்து, மற்றொரு தெருவில் இயங்கும் கணினி அறை, சத்துணவு அறை, குடிநீருக்காக வாகன போக்குவரத்துள்ள சாலையில் செல்வதால், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.வெவ்வேறு தெருக்களில் தனித்தனி கட்டடங்களில் இயங்கும் வகுப்பறை கட்டடங்களை, ஒரே வளாகத்தில் அமைக்க வலியுறுத்தி, தலைமை ஆசிரியர் கலாவள்ளி, நேற்று மதியம், சாலையில் சேர் போட்டு அமர்ந்து உணவு சாப்பிட்டு, நுாதன போராட்டம் நடத்தினார்.தலைமை ஆசிரியர் கூறியதாவது:திருக்காலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில், 2019 நவ., 17 முதல் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். 213 மாணவர்கள் பயில்கின்றனர்.சின்னவேப்பங்குளத்தை சுற்றி, நீர்நிலை புறம்போக்கு பகுதியாக இருப்பதால், கல்வித் துறை உயர் அதிகாரிகளால், எதுவும் செய்ய முடியவில்லை.அதிகாரிகள் முயற்சித்தாலும், ஊர் மக்கள், தங்களது சுயநலப்போக்கால், பள்ளிக்கு இடம் ஒதுக்க அக்கறையின்றி உள்ளனர். பள்ளியை வேறு இடத்தில் மாற்றுவதற்கும் மறுக்கின்றனர்.தற்போது பெய்து வரும் மழையால், கட்டடத்தின் கீழ் தளம் இறங்குகிறது. மேல்தளம் பெயர்ந்து, அபாயகரமான நிலையில் உள்ளது. மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்இருக்கிறது.இதை பார்த்து மன வருத்தம் ஏற்பட்டதால், டிச., 1 முதல் பள்ளி செயல்படும் நாட்களில், மதிய உணவை தெருவில் வைத்து சாப்பிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கோரிக்கையை, தலைமை ஆசிரியர் அலுவலக அறையின் கதவில் ஒட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X