தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் | ஈரோடு செய்திகள் | Dinamalar
தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
10:34

ஈரோடு: ஈரோட்டில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், 1,257 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், திருமகன் ஈவெரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கி, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: தமிழகத்தில் உள்ள, 18 வகையான தொழிலாளர் நலவாரியங்களில், ஈரோடு மாவட்டத்தில், 88 ஆயிரத்து, 441 பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு பெறாத தொழிலாளர்கள் ஆன்லைனில், www.tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். மாவட்டத்தில், 1,257 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 36.13 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வி, இயற்கை மரணம் அடைந்தோருக்கான உதவித்தொகை, ஓய்வூதிய ஆணை போன்றவை வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்திருந்தால், சொந்த வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதியுதவி அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு பேசினார். டி.ஆர்.ஓ., முருகேசன், தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் காயத்திரி, திருஞான சம்பந்தம், முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X