ஈரோடு: ''மதுபான பார்களில், அரசு அனுமதித்த நேரத்தை விட, கூடுதல் நேரத்தில் மது பானம் விற்றால் பார்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே, மதுபான பார்களை திறந்திருக்க வேண்டும். டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபான பார்களில் இருந்தோ, அதற்கு அருகில் இருந்தோ மதுபான பாட்டில்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட பார்களே அதற்கு பொறுப்பாகும். டாஸ்மாக் கடை எண்.3507 ஒட்டிய பாரில் இருந்து, டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபானங்களை எடுத்து சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த பாரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என, கலால் பிரிவு உதவி ஆணையருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.