மொடக்குறிச்சி: அரச்சலூர் அடுத்த பள்ளியூத்தை சேர்ந்தவர் விக்ரமன், 40, பொக்லைன் ஆப்பரேட்டர். இவர் மனைவி சாந்தி, 37. இவர்களுக்கு பிரசன்னவேல், 7, என்ற மகன் உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது திருமண நாளையொட்டி, வேலைக்கு செல்லாமல் விக்ரமன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அருகில் உள்ள மாட்டு கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக ஒயர் இழுத்துள்ளார். அந்த சமயத்தில், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.