ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சந்தோஷ், 27; எலெக்ட்ரீஷியன். இவருக்கும், அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவிக்கும், கடந்த, 25ல் திருமணம் நடந்ததாக, ஓசூர் ஒன்றிய அலுவலக, சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, 58, ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதையடுத்து, சந்தோஷ், அவரது தந்தை ராமமூர்த்தி மற்றும் அவருக்கு உதவிய உறவினர்களான செந்தில்குமார், நந்தினி ஆகிய நான்கு பேர் மீது, குழந்தை திருமண சட்டத்தில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.