சேலம்: சேலம், டாக்டரிடம் ஆன்லைனில் நூதன முறையில், 1.75 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள பொட்டியம்பட்டியை சேர்ந்த நாகராஜன் மகன் மோகன்ராஜ்,28; தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரின் மொபைல் போனுக்கு கடந்த நவ.,26 மாலை, 6:00 மணிக்கு, உங்களின் எஸ்.பி.ஐ., வங்கி கணக்கை தரம் உயர்த்த உள்ளதால், சுய விபரங்கள், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களின் விபரங்களை பதிவிடவும் என எஸ்.பி.ஐ., வங்கியின் செயலியை போலான போலி செயலியை அனுப்பி உள்ளனர். அந்த செயலியை பதவிறக்கம் செய்து, அதில் மோகன்ராஜ் தன் விபரங்களை தெரிவித்துள்ளார். அதை பயன் படுத்தி, மோகன்ராஜியின் வங்கி கணக்கில் இருந்து, 1 லட்சத்து, 75 ஆயிரத்து, 982 ரூபாயை, கும்பல் அபேஸ் செய்தது. நூதன முறையில் நடத்தப்பட்ட இந்த மோசடி குறித்து டாக்டர் மோகன்ராஜ் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.