பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக, பெய்த தொடர் மழையால் சீதோஷ்ணம் மாறி, பள்ளிபாளையம் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏராளமானோர் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். இதனால், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக முதியோர், வேலைக்கு செல்பவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதனால், இப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.