'பிளாஸ்டிக் தொழிற்சாலை குறித்து தகவல் அளித்தால் வெகுமதி' | கரூர் செய்திகள் | Dinamalar
'பிளாஸ்டிக் தொழிற்சாலை குறித்து தகவல் அளித்தால் வெகுமதி'
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2021
16:26

கரூர்: 'மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும்' என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டு, பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பை, உணவு பொருள்களைக் கட்டப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், உறிஞ்சி குழல்கள், கொடிகள் ஆகியவை தயாரிப்பது, சேமிப்பது, வினியோகிப்பது, விற்பது, உபயோகிப்பது ஆகியவை அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து, அவற்றை மூட உத்தரவு பிறப்பித்து வருகிறது. இருப்பினும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும், தடைசெய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று சட்ட விரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் குறித்த தகவலை கரூர் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளரிடம் பொது மக்கள் தெரிவிக்கலாம். புகார்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி அழைப்புகள் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் பதிவு செய்யலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும். அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X