ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விவசாயிகள் பயிற்சி நடந்தது. 40 விவசாயிகள் பங்கேற்றனர்.
வேளாண் துணை இயக்குனர் சேக் அப்துல்லா தலைமை வகித்தார். ராமநாதபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். வட்டார உதவி பொறியாளர் குபேந்திரன், விதைச்சான்று உதவி இயக்குனர் சக்திகணேஷ், வேளாண் விற்பனைத்துறை அலுவலர் பாலமுருகன், ராமநாதபுரம் வட்டார வேளாண்மை அலுவலர் கலைவாணி, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்துலெட்சுமி உட்பட பலர் பேசினர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் சூர்யா நன்றி கூறினார்.