ராமநாதபுரம்: மதுரையில் டிச.7-----9 வரை நடக்கும் மாநில அளவிலான 39வது மூத்தோர் தடகள போட்டிகளில் பங்கேற்பதற்கான தேர்வு போட்டிகள் நாளை மறுநாள் (டிச.5) ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
35 வயது முதல் 70 வயது உடையோருக்கான பிரிவுகளில் போட்டி நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் ராமநாதபுரம் மாவட்ட மூத்தோர் தடகள சங்க சிவபாலசுந்தர், பாலசரவணன், ஹனீபா ஆகியோரை 90438 27150, 99420 49549, 81441 42404 அலைபேசிகளில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்யலாம்.