குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை விடுவிக்காதீர்; ஹிந்து பேரமைப்பு புகார் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளை விடுவிக்காதீர்; ஹிந்து பேரமைப்பு புகார்
Added : டிச 03, 2021 | |
Advertisement
 

சிவகங்கை : கோயம்புத்துார் குண்டு வெடிப்பு வழக்கின் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கூடாது என சிவகங்கை வீர ஹிந்து பேரமைப்பு சார்பில் கலெக்டர்மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனர்.



அதில் கூறியிருப்பதாவது, தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. சூழ்நிலை மற்றும் உணர்ச்சி வசத்தால் குற்றம் செய்தவர்களை விடுவிப்பதில்தவறில்லை. ஆனால் 1998ல் கோயம்புத்துார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேரின் உயிரை பறித்தும், 200 பேர் காயமுற்றனர்.இந்த வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை ஒரு போதும் விடுவிக்க கூடாது. இதை காரணமாக வைத்து போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X