மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள அரி மண்டபத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் ரேஷன் பொருட்கள் வாங்கக்கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அரிமண்டபம் கிராமத்தில் உள்ள சாலைகள் போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால் சாலைகள் அரிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.தற்போது பெய்த மழைக்கு மேலும் மோசமானதால் ரேஷன் கடைக்கு கூட பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்ல முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.