நூறு நாள் வேலை திட்டத்தில் அரசியல் தலையீடு; அமைச்சரிடம் தலைவர்கள் புகார் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
நூறு நாள் வேலை திட்டத்தில் அரசியல் தலையீடு; அமைச்சரிடம் தலைவர்கள் புகார்
Added : டிச 03, 2021 | |
Advertisement
 

திருப்புத்துார் : நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலைக்கான பணி உத்தரவு ஒதுக்கீட்டில் அரசியல் தலையீடு இருப்பதாக ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் அமைச்சர் பெரியகருப்பனிடம் புகார் அளித்தனர்.



மாநில நிதிக்குழு மானிய நிதியின் கீழ் வழங்கப்படும் நிதி ஆயிரக்கணக்கில் மட்டுமே கிடைக்கிறது. குறைவான நிதியால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை உறுதி திட்ட பணிக்கான நிர்வாக அனுமதியை கலெக்டர் வழங்கிவிட்டார். ஆனால் பி.டி.ஓ., அதற்கான உத்தரவை வழங்கும் போது அரசியல் பிரதிநிதிகள் குறுக்கீடு செய்கின்றனர். இதனால் பணி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்படுகிறது.

எனவே பணி உத்தரவை அந்தந்த ஊராட்சி நிர்வாகமே வழங்க கலெக்டர் அனுமதிக்க வேண்டும். ஊராட்சி செயலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணிகளை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.அது போன்று பணிபுரியும் ஊராட்சி செயலர்களை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும். பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வை கிராமசபையில் வைக்க வேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஊராட்சி தலைவர்களுக்கான குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் புகார் செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X